சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூர் 35வது வார்டுக்கு உட் பட்ட முத்தமிழ்நகர் பகுதியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிராயபுரம் எம்.எஸ்.கோயில் தெருவில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி சையத் அலிகான் தலைமையில், நூற்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி ஆகியோர் வழங்கினர். உடன், மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஷேக் அப்துல்லா இக்பால், சாதிக் பாஷா, முகமது கவுசிக், ஆட்டோ உசேன், நசீர் அகமது, ஆட்டோ முருகன் உட்பட பலர் உள்ளனர்.
